/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு பணி; ரூ.5.40 லட்சம் அபராதம் விதிப்பு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு பணி; ரூ.5.40 லட்சம் அபராதம் விதிப்பு
நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு பணி; ரூ.5.40 லட்சம் அபராதம் விதிப்பு
நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு பணி; ரூ.5.40 லட்சம் அபராதம் விதிப்பு
நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு பணி; ரூ.5.40 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:42 PM
-நமது நிருபர் -
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, ஜன., முதல் தேதியில் இருந்து தற்போது வரை, 5 மாத காலத்தில், 2 குழந்தை தொழிலாளர் மற்றும், 25 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய தொழில் நிறுவன உரிமையாளர்கள் மீது, 5.40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் காயத்ரி கூறியிருப்பதாவது:
நிறுவனங்கள் உள்ளிட்ட பணித்தளங்களில், 14 வயதுக்குட்பட்டவர்கள், எவ்வித பணியிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது. 15 முதல், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது.
அவர்களை அபாயகரமற்ற பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், தொழிலாளர் துறைக்கு உரிய அறிவிப்பு படிவம் வழங்க வேண்டும். அவர்களுக்கு வேலை நேரம், 6:00 மணி நேரம் மட்டுமே வழங்க வேண்டும்.
இரவு, 7:00 மணி முதல், காலை, 9:00 மணி வரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. சட்டப்பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
பெற்றோருக்கும் அபராதம்
குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு, குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ், கடந்த ஜன., முதல் தேதியில் இருந்து தற்போது வரை, 5 மாத காலத்தில், 2 குழந்தை தொழிலாளர் மற்றும், 25 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதே காலக்கட்டத்தில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்திய தொழில் நிறுவன உரிமையாளர்கள் மீது, 5.40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புகார் செய்யலாம்
'குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் எவரேனும் பணிஅமர்த்தப்பட்டால், 'சைல்டு லைன்' எண், 1098க்கு டயல் செய்து புகார் தெரிவிக்கலாம். http://pencil.gov.in/Users/login என்ற இணைய தளத்திலும் புகார் தெரிவிக்கலாம்; புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.