/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில்வே மேம்பாலம் மீது விரிசல் பொதுமக்கள் அச்சம் ரயில்வே மேம்பாலம் மீது விரிசல் பொதுமக்கள் அச்சம்
ரயில்வே மேம்பாலம் மீது விரிசல் பொதுமக்கள் அச்சம்
ரயில்வே மேம்பாலம் மீது விரிசல் பொதுமக்கள் அச்சம்
ரயில்வே மேம்பாலம் மீது விரிசல் பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூன் 14, 2025 11:21 PM

திருப்பூர்: வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் மையப் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
கோவை - சேலம் மற்றும் கோவை - திருச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், அவிநாசி - பல்லடம் இடையே மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த ரோட்டில் வஞ்சிபாளையம் பகுதியில் ரயில்வே பாதையையும், மங்கலத்தில் நொய்யல் ஆற்றையும் கடந்து செல்லும் வகையில் பாலங்கள் உள்ளன.
தினமும், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டைப் பயன்படுத்துகின்றன.
இந்த ரோட்டில், வஞ்சிபாளையத்தில் உள்ள ரயில்வே பாலத்தில், விரிசல் ஏற்பட்டுள்ளது. பதிக்கப்பட்டுள்ள இரும்பு இணைப்புகள் மற்றும் கம்பிகள் கான்கிரீட் தளத்துக்கு வெளியே நீட்டிய வண்ணம் உள்ளது. பாலம் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மையப்பகுதியில் உள்ள விரிசல் மற்றும் நீட்டிக் கொண்டிருக்கும் இரும்பு துண்டுகளை தவிர்க்க வாகனங்களை திருப்பினாலோ, திடீரென நிறுத்தினாலோ விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
வாகன ஓட்டிகளின் அச்சம் மற்றும் விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில், அந்த இடத்தில் சீரமைப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.