Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஐ.டி.ஐ.,யில் இணைய 720 பேர் விண்ணப்பம்

ஐ.டி.ஐ.,யில் இணைய 720 பேர் விண்ணப்பம்

ஐ.டி.ஐ.,யில் இணைய 720 பேர் விண்ணப்பம்

ஐ.டி.ஐ.,யில் இணைய 720 பேர் விண்ணப்பம்

ADDED : ஜூன் 14, 2025 11:22 PM


Google News
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், உடுமலை உள்ள அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை https://www.skilltrainning.gov.in என்ற ஆன்லைனில், மே 19 முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த, 13ம் தேதியுடன் விண்ணப்பிக்க அவகாசம் நிறைவடைந்த நிலையில், இதுவரை, 720 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு, ஒப்புதல் நடந்தது. மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படுகிறது. அதனை தொடர்ந்து கவுன்சிலிங், அட்மிஷன் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும். விபரங்களுக்கு 94990 55695, 94990 55700, 94990 55698 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us