/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மாநகராட்சி வரிவிதிப்பு; ஏகப்பட்ட குளறுபடிகள்' 'மாநகராட்சி வரிவிதிப்பு; ஏகப்பட்ட குளறுபடிகள்'
'மாநகராட்சி வரிவிதிப்பு; ஏகப்பட்ட குளறுபடிகள்'
'மாநகராட்சி வரிவிதிப்பு; ஏகப்பட்ட குளறுபடிகள்'
'மாநகராட்சி வரிவிதிப்பு; ஏகப்பட்ட குளறுபடிகள்'
ADDED : ஜூன் 12, 2025 01:09 AM
திருப்பூர் : நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம், முதல்வருக்கு அனுப்பிய மனு:
திருப்பூரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சாலை விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ரோடுகள் சேதமடைந்துள்ளன.பெருகிவிட்ட வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வீதி, ரோடுகள் விரிவுப்படுத்தப்படவில்லை.
மக்களுக்கான பொழுதுபோக்கு எதுவுமில்லை. வரி வசூலிப்பிலும் குளறுபடி உள்ளது. பெரிய கட்டடங்களுக்கு, குறைவான வரி; சிறிய கட்டடங்களுக்கு, அதிக வரி என்பது போன்ற நிலையுள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளால், வாகன போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் சாலை விதிமீறி, வாகனம் ஓட்டுவதால், போக்குவரத்து நெரிசல், விபத்து அதிகரிக்கிறது. திருப்பூரின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.