/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீவனத்துடன் தானிய உபபொருட்கள்; கால்நடைத்துறையினர் அறிவுரைதீவனத்துடன் தானிய உபபொருட்கள்; கால்நடைத்துறையினர் அறிவுரை
தீவனத்துடன் தானிய உபபொருட்கள்; கால்நடைத்துறையினர் அறிவுரை
தீவனத்துடன் தானிய உபபொருட்கள்; கால்நடைத்துறையினர் அறிவுரை
தீவனத்துடன் தானிய உபபொருட்கள்; கால்நடைத்துறையினர் அறிவுரை
ADDED : ஜன 12, 2024 11:12 PM
உடுமலை;தானிய உபபொருள்களை தீவனத்தில் கலப்பதால், செலவு குறைவதுடன் கால்நடைகளுக்கும் சத்துள்ள ஆகாரம் கிடைக்கும் என, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்ப்பு, வேளாண்மையுடன் இணைந்த உபதொழிலாக உள்ளது. அவ்வகையில், விவசாயிகள் பலர், பசு வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிப்பு, வறட்சி போன்ற காரணங்களால் தீவனமின்றி கால்நடைகள் பாதிக்கின்றன. பசுந்தீவனத்துக்கு அதிகளவில் செலவிட வேண்டியுள்ளது.
இந்நிலையில், சில வழிமுறைகளை பின்பற்றி தீவனச்செலவை பெருமளவு குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைத்துறையினர் கூறியதாவது: கால்நடைகள் பராமரிப்பில், -70 சதவீதம் வரை தீவனச் செலவு ஏற்படுகிறது. இதனை குறைக்க, தீவனப் பயிர்களை வளர்த்து, உரிய அளவில் அளிக்க வேண்டும்.
அவ்வகையில், உடைத்த இருங்குச் சோளம், கேழ்வரகு, கம்பு,சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றைமக்காச்சோளத்துக்குப் பதிலாக, 50 சதவீதம் வரை தீவனத்தில் அளிக்கலாம். அதேபோல், அரிசித்தவிடு, கோதுமைத்தவிடு, அரிசிக்குருணை, உளுந்து, பயறு, கடலை பொட்டு போன்றவற்றை கால்நடை தீவனத்தில், 50 சதவீதம் வரை சேர்க்கலாம்.
விலை மலிவாக கிடைக்கும் தானிய உபபொருள்களை, தீவனத்தில் கலப்பதால் தீவனச்செலவு மிச்சமாவதுடன் சத்துள்ள ஆகாரம் கிடைக்கிறது.
சமச்சீரான சத்துள்ள தீவனத்தை ஆண்டு முழுவதும் கொடுப்பதால், கால்நடைகளின் முழு உற்பத்தித் திறனை பெற முடியும்.
இவ்வாறு, கால்நடைத்துறையினர் கூறினர்.