/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி கடை விண்ணப்பிக்க அழைப்பு கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி கடை விண்ணப்பிக்க அழைப்பு
கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி கடை விண்ணப்பிக்க அழைப்பு
கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி கடை விண்ணப்பிக்க அழைப்பு
கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி கடை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 24, 2025 11:17 PM
திருப்பூர்: 'திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், சிறுதானிய சிற்றுண்டி கடை நடத்த விருப்பமுள்ள மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிற்றுண்டி கடை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓராண்டுக்கு, சிற்றுண்டி கடை நடத்த விருப்பமுள்ள, மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடையில், சிறுதானிய உணவு பொருட்கள் மட்டும் விற்கப்பட வேண்டும்; வேறு உணவு பொருள் விற்ககூடாது; வேறு பணிகளையும் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட மகளிர் குழுவினர் மட்டுமே கடையில் இருக்க வேண்டும்; மற்றவர்கள் இருக்க கூடாது.
கடையின் பெயரில் தனி வங்கி கணக்கு துவக்கி, வரவு -செலவை விவரத்தை வங்கி கணக்கு வாயிலாக பராமரிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து, பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தல், மூன்றாவது தளத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை, 0421 2971149, 94440 94162 என்ற எண்களில் அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.