Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வர்த்தக வாய்ப்பு பிரகாசம்! செயற்கை நுாலிழை ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பு: திருப்பூர் தொழில் துறையினர் தளராத நம்பிக்கை

வர்த்தக வாய்ப்பு பிரகாசம்! செயற்கை நுாலிழை ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பு: திருப்பூர் தொழில் துறையினர் தளராத நம்பிக்கை

வர்த்தக வாய்ப்பு பிரகாசம்! செயற்கை நுாலிழை ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பு: திருப்பூர் தொழில் துறையினர் தளராத நம்பிக்கை

வர்த்தக வாய்ப்பு பிரகாசம்! செயற்கை நுாலிழை ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பு: திருப்பூர் தொழில் துறையினர் தளராத நம்பிக்கை

ADDED : மார் 22, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: நம் நாட்டில் இருந்து, செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஆடை ஏற்றுமதி அதிகரித்து வருவதால், புதிய வர்த்தக வாய்ப்புகள் பிரகாசமாகி வருவதாக, திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின், வர்த்தகத்துறை அமைச்சகம், அவ்வப்போது, நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாத நிலவரப்படி, மூன்று லட்சத்து, 21 ஆயிரத்து, 343 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதியாகியுள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து, நான்கு லட்சத்து, 43 ஆயிரத்து, 66 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வகை பொருட்கள் இறக்குமதியும் நடந்துள்ளது. ஆயத்த ஆடை நீங்கலாக, ஜவுளி வர்த்தகத்தில் எண்ணற்ற பொருட்களும் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், பருத்தி நுாலிழை, துணி ரகங்கள், வீட்டு உபயோக ஜவுளி, ஆடை ரகங்களுக்கு, வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். அதன்படி, கொரோனா தொற்றுக்கு பின், இந்தாண்டு இவ்வகை பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் மட்டும், 8,547 கோடி ரூபாய் மதிப்பிலான, பருத்தி நுாலிழை, துணி மற்றும் திரைச்சேலை, மெத்தை விரிப்பு உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த 2024 பிப்., மாதம், 8,521 கோடி ரூபாயாக இருந்தது; இந்தாண்டு, 26 கோடி ரூபாய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த, ஏப்., முதல் பிப்., வரையிலான, 11 மாதங்களில், 92 ஆயிரத்து, 314 கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி நுாலிழை, துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி நடந்துள்ளது; முந்தைய ஆண்டின், இதே 11 மாதங்களில், 87 ஆயிரத்து, 648 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்திருந்தது.

பாலியஸ்டர், லினன், நைலான் போன்ற செயற்கை நுாலிழை ஏற்றுமதி, கடந்த மாதம் 3,444 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; ஏப்., முதல் பிப்., வரையிலான, 11 மாதங்களில், 37 ஆயிரத்து, 406 கோடி ரூபாய் அளவுக்கு செயற்கை நுாலிழை ஏற்றுமதி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுாலிழை ஏற்றுமதி, கடந்த 2024 பிப்., மாதத்தை காட்டிலும், 137 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இருப்பினும், 11 மாதகால ஏற்றுமதியை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2,010 கோடி ரூபாய் அளவுக்கு செயற்கை நுாலிழை, துணிகள் மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது; பருத்தி நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும், 5.32 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 11 மாத கால ஏற்றுமதியை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2,010 கோடி ரூபாய் அளவுக்கு செயற்கை நுாலிழை, துணிகள் மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பருத்தி நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும், 5.32 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது

புதிய வளர்ச்சி ஏற்படும்...

ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும், 2022, 2023ம் ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை சந்தித்தது. 2024ம் ஆண்டுக்கு பின்னரே, சர்வதேச அளவில் நிலைமை சீரானது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து தொழில் பிரிவுகளிலும் சீரான வளர்ச்சி கிடைத்து வருகிறது. பருத்தி நுால், துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி வழக்கமாக நடந்து வருகிறது. அதற்கு இணையாக, செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியும் படிப்படியாக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக, திருப்பூர் தொழில்துறையினர், செயற்கை நுாலிழை கொண்டு, பல்வகை துணி ரகங்கள் உற்பத்தி செய்யவும், புதிய டிசைனில் செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்தி செய்யவும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு விற்பனைக்கு மட்டுமல்ல, ஏற்றுமதி வர்த்தகத்திலும் இது புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும்.- திருப்பூர் தொழில்துறையினர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us