ADDED : செப் 14, 2025 11:51 PM

திருப்பூர்; 1893ல் சிகாகோவில், சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க உரை நிகழ்த்திய தினம், உலக சகோரத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.
இதன் 133ம் ஆண்டு விழா திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவலாயத்தில் உலக சகோதரத்துவ தின நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவில் இடம்பெற்ற கருத்துகள், மாணவ, மாணவியர் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. சேவலாயம் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.