/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/9ம் தேதி முதல் பஸ் 'ஸ்டிரைக்' 'டிப்போ' முன் விளக்க கூட்டம்9ம் தேதி முதல் பஸ் 'ஸ்டிரைக்' 'டிப்போ' முன் விளக்க கூட்டம்
9ம் தேதி முதல் பஸ் 'ஸ்டிரைக்' 'டிப்போ' முன் விளக்க கூட்டம்
9ம் தேதி முதல் பஸ் 'ஸ்டிரைக்' 'டிப்போ' முன் விளக்க கூட்டம்
9ம் தேதி முதல் பஸ் 'ஸ்டிரைக்' 'டிப்போ' முன் விளக்க கூட்டம்
ADDED : ஜன 05, 2024 01:22 AM

திருப்பூர்;வரும், 9ம் தேதி 'ஸ்டிரைக்' நடத்துவது தொடர்பான விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
சம்பள பேச்சுவார்த்தை முடிக்க வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். வரும், 9ம் தேதி, 'ஸ்டிரைக்' நடத்துவது குறித்த விளக்க கூட்டம், திருப்பூர், காங்கயம் ரோடு, டிப்போ முன் நடந்தது.
சி.ஐ.டி.யு., மண்டல துணை பொது செயலாளர் தேவநேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தமிழ் செல்வன், பொருளாளர் முருகானந்தம், பொது செயலாளர் செல்லத்துறை உள்ளிட்டோர், கோரிக்கையை விளக்கி கூட்டத்தில் பேசினர்.
ஓய்வு பெற்ற நல அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ், மண்டல துணை செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.