/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனியார் சட்ட கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் தனியார் சட்ட கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் சட்ட கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் சட்ட கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியார் சட்ட கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 01, 2025 11:22 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் அருகேயுள்ள தனியார் சட்டக் கல்லுாரிக்கு நேற்று இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, கல்லுாரியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் அருகே பெருமாநல்லுார் - பாலசமுத்திரம் பகுதியில் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி செயல் படுகிறது. நேற்று காலை 10:45 மணியளவில் கல்லுாரி அலுவலக இ-மெயிலுக்கு ஒரு கடிதம் வந்தது.
பம்பாய் ஐகோர்ட் பார் கவுன்சில் அனில் சுப்ர மணியன் என்ற பெயரில் வந்த அக்கடிதத்தில், கல்லுாரியில் மாணவியர் கழிப்பறையில் ஒரு வெடிகுண்டும் மேலும் இரு இடங்களிலும் என மொத்தம் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. பகல் 3:00 மணிக்கு அவை வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர, எஸ்.வி. சேகர் மீதான பெண் பத்திரிகையாளர் மீதான அவதுாறு வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும்.
தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் அவர் நெருக்கமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வழக்கு நியாயமாக நடக்காது என்பதைக் காட்டுகிறது, என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் பெரு மாநல்லுார் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
போலீசார், வெடிகுண்டு கண்டு பிடிப்பு மற்றும் ெசயலிழப்பு போலீசார் அங்கு விரைந்தனர். கல்லுாரி வளாகத்திலிருந்தோர் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஈரோடு மாவட்ட போலீஸ் மோப்ப நாய் பவானி வரவழைக்கப்பட்டது. கல்லுாரி முழுவதும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
அவிநாசி தீயணைப்பு துறை வாகனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதனால், பெருமாநல்லுார் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது. நேற்று மாலை, 4:30 மணி வரை நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதனால், இ-மெயிலில் வந்த தகவல் புரளி என்பது தெரிந்தது.