/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மலரும் நினைவுகள்: கலங்கிய மாணவர்கள்மலரும் நினைவுகள்: கலங்கிய மாணவர்கள்
மலரும் நினைவுகள்: கலங்கிய மாணவர்கள்
மலரும் நினைவுகள்: கலங்கிய மாணவர்கள்
மலரும் நினைவுகள்: கலங்கிய மாணவர்கள்
ADDED : ஜூலை 20, 2024 10:41 PM

அவிநாசி;அவிநாசி அருகே பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2006 -- 2007ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள், 17 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர்.
சவூதி அரேபியா, கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர். பள்ளி பருவ காலங்களில் ஏற்பட்ட மலரும் நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நிகழ்ச்சியில், முன்னாள் மற்றும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக நினைவுப் பரிசுகள், கேடயங்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர் ராஜன் தலைமையில், முன்னாள் மாணவர்கள் தினேஷ், தாமரைச்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். முன்னாள் மாணவர்கள் அம்புரோஸ், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ், பிரபாகரன், சிந்து, அபிநயா, ரேகா, அகிலா, சாந்தகுமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் அண்ணாதுரை, சேது மாதவன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
---
அவிநாசி அருகே பெரியாயிபாளையம், திருவள்ளுவர் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்தவர்கள், 17 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து, போட்டோ எடுத்து கொண்டனர்.