/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'டாஸ்மாக்' பாருக்காக மையத்தடுப்பு அகற்றம் 'உடந்தை' அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? 'டாஸ்மாக்' பாருக்காக மையத்தடுப்பு அகற்றம் 'உடந்தை' அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
'டாஸ்மாக்' பாருக்காக மையத்தடுப்பு அகற்றம் 'உடந்தை' அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
'டாஸ்மாக்' பாருக்காக மையத்தடுப்பு அகற்றம் 'உடந்தை' அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
'டாஸ்மாக்' பாருக்காக மையத்தடுப்பு அகற்றம் 'உடந்தை' அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
UPDATED : ஜூலை 21, 2024 10:04 AM
ADDED : ஜூலை 20, 2024 10:42 PM

அனுப்பர்பாளையம்;திருப்பூர், பி.என் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட்டுக்கும் பிச்சம்பாளையத்திற்கும் இடையில் மெயின் ரோட்டில் மது பார் ஒன்று திறக்கப பட்டு செயல்படுகிறது.
'குடி'மகன்கள் சுலபமாக வந்து செல்ல, பி.என்., ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த மையத்தடுப்பு அகற்றப்பட்டு, பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பி.என்., ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து சக்தி தியேட்டர் நான்கு ரோடு சந்திப்பில், வாகனங்கள் இரு பக்கமும் சென்று வர வசதியாக மையத்தடுப்புஅகற்றப்பட்டு பாதை அமைக்கப்பட்டிருந்தது. அந்த பாதையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது என போக்குவரத்து போலீசார் பாதையை அடைத்து விட்டனர்.
இதனால் சக்தி தியேட்டர் ரோட்டில் இருந்து வரும் வாகனம் ரோட்டின் மறுபக்கம் செல்ல பிச்சம்பாளையம் வரை சென்று சுற்றி செல்லும் நிலை உள்ளது. ஆனால் தற்போது, மதுபான கூடத்திற்காக மையத்தடுப்பை பாதை அமைத்து உள்ளனர்.
இதனால் காலை - மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, மையத்தடுப்பு மீண்டும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
----