/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் வாரிய அலுவலகத்தில் அகற்றப்படாத பேனர் மின் வாரிய அலுவலகத்தில் அகற்றப்படாத பேனர்
மின் வாரிய அலுவலகத்தில் அகற்றப்படாத பேனர்
மின் வாரிய அலுவலகத்தில் அகற்றப்படாத பேனர்
மின் வாரிய அலுவலகத்தில் அகற்றப்படாத பேனர்
ADDED : ஜூன் 06, 2025 06:23 AM

பல்லடம்; பல்லடம்- - உடுமலை ரோட்டில், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் நுழைவு வாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துடனான பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கு முன், தொ.மு.ச., சார்பில் வைக்கப்பட்ட இந்த பேனர், இன்றுவரை அகற்றப்படாமல் உள்ளது. அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் விழாக்களை, அந்தந்த தொழிற்சங்கங்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்காக வைக்கப்படும் பேனர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். ஆனால், மின்வாரிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தொ.மு.ச., பேனர், ஓராண்டுக்கு மேல் ஆகியும் அகற்றப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.