/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கறவை மாடுகளுக்கு சரிவிகித உணவு: கால்நடைத்துறையினர் அறிவுரைகறவை மாடுகளுக்கு சரிவிகித உணவு: கால்நடைத்துறையினர் அறிவுரை
கறவை மாடுகளுக்கு சரிவிகித உணவு: கால்நடைத்துறையினர் அறிவுரை
கறவை மாடுகளுக்கு சரிவிகித உணவு: கால்நடைத்துறையினர் அறிவுரை
கறவை மாடுகளுக்கு சரிவிகித உணவு: கால்நடைத்துறையினர் அறிவுரை
ADDED : ஜன 30, 2024 11:43 PM
உடுமலை:கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனத்தை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். ஆனால், சினைபிடிக்காத கறவை மாட்டை பராமரிப்பது, பால் பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாக மாறி வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, தொற்றுநோய், பிறவிக்கோளாறு போன்ற காரணங்களால், சில கறவை மாடுகளில் சினை பிடிக்காமல், மலட்டுத்தன்மை காணப்படுகிறது.
கருவுறும் தன்மை மற்றும் கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும் விவசாயிகள், பொருளாதார இழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
அதேநேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதன் வாயிலாக, மலட்டுத்தன்மையை போக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைத் துறையினர் கூறியதாவது: பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவம் சுழற்சியானது, 18 முதல், 21 நாட்களுக்கு ஒரு முறையும், 18 -முதல், 24 மணி நேரம் காணப்படும்.சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை, காலையில் இருந்து, மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். அதாவது, சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்க வேண்டும்.
சினைப் பருவத்திற்கு வராத மாடுகளை, கால்நடை டாக்டர் வாயிலாக பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
குறிப்பாக, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனத்தை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.