/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முருங்கைக்கு நிலையான வருமானம்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முருங்கைக்கு நிலையான வருமானம்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
முருங்கைக்கு நிலையான வருமானம்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
முருங்கைக்கு நிலையான வருமானம்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
முருங்கைக்கு நிலையான வருமானம்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 21, 2025 06:26 AM
திருப்பூர் : முருங்கை சாகுபடியில் நிலையான வருமானம் பெற, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.
திருப்பூர், மூலனுார் வட்டாரத்தில் முருங்கை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். முருங்கைக்காயை மட்டுமே, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆண்டுமுழுவதும், கிலோ, 150 ரூபாய் என்ற விலையில் முருங்கைக்கு விலை கிடைக்கிறது.
முருங்கை விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க, முருங்கை உற்பத்தி, சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மூலனுார் வட்டார முருங்கை தினசரி சந்தையில் நடந்தது. காணொலி வாயிலாக, தோட்டக்கலைத்துறை இயக்குனர் முன்னிலையில் இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் பகிரப்பட்டன. காணொளி காட்சி வாயிலாக நடத்தப்பட்டது.
இதில், வட்டார தோட்டக்கலை துறையினர், ஏற்றுமதி ஆலோசகர், முருங்கை விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், முருங்கை மதிப்புக் கூட்டு பொருள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது.