ADDED : ஜூன் 02, 2025 06:21 AM
திருப்பூர்,: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அச்சுனவா கர்டார், 45, நியூ திருப்பூரில்உள்ள ஒரு பஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
ஈட்டிவீரம் பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு அருகே நடந்து சென்றபோது பைக்கில் வந்த செட்டிபாளையம் இந்திரா நகரை சேர்ந்த தமிழரசன், 22, சிவா, 20, ஆகியோர் இவரிடம் பணம் பறிக்க முயன்றனர்.
அருகில் உள்ளவர்கள், இவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.