/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கருவலுார் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு கருவலுார் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கருவலுார் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கருவலுார் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கருவலுார் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 24, 2025 11:29 PM

அவிநாசி: கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கருவலுார், கொங்கு கலையரங்கில் நடந்த விழாவை, கருவலுார் ரோட்டரி சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம், பள்ளி மேலாண்மை குழு, கொங்கு வேளாளர் அறக்கட்டளை, கருவலுார் அனைத்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்டவை இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இதில், ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு, கருவலுார் மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், ஊராட்சி முன்னாள் தலைவர் அவிநாசியப்பன், முன்னாள் தலைமையாசிரியர் சுப்பிரமணியம், கொ.ம.தே.க., நிர்வாகி கணேசன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி செந்தில்குமார் உட்பட பலர் பேசினர்.