/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஏசி' மிஷினில் காஸ் நிரப்பும் போது விபத்து 'ஏசி' மிஷினில் காஸ் நிரப்பும் போது விபத்து
'ஏசி' மிஷினில் காஸ் நிரப்பும் போது விபத்து
'ஏசி' மிஷினில் காஸ் நிரப்பும் போது விபத்து
'ஏசி' மிஷினில் காஸ் நிரப்பும் போது விபத்து
ADDED : மே 24, 2025 11:30 PM
திருப்பூர்: திருப்பூர், ஓடக்காட்டைச் சேர்ந்தவர் கண்ணன், 45. இவர் தனது வீட்டில் 'ஏசி' இயந்திரங்கள் பழுது பார்ப்பு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கண்ணனும், ஊழியர்கள் இளங்கோவன், 25 மற்றும் லோகநாதன் 29 ஆகியோர் ஒரு 'ஏசி' இயந்திரத்துக்கு காஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதில், மூன்று பேருக்கும் காயமேற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.