/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பகுப்பாய்வு சோதனை; குடிநீர் மாதிரி சேகரிப்புபகுப்பாய்வு சோதனை; குடிநீர் மாதிரி சேகரிப்பு
பகுப்பாய்வு சோதனை; குடிநீர் மாதிரி சேகரிப்பு
பகுப்பாய்வு சோதனை; குடிநீர் மாதிரி சேகரிப்பு
பகுப்பாய்வு சோதனை; குடிநீர் மாதிரி சேகரிப்பு
ADDED : ஜன 05, 2024 11:45 PM

அவிநாசி;அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளுக்கு, மேட்டுப்பாளையம் - பவானி ஆற்றிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
அவிநாசி - அன்னுார் கூட்டு குடிநீர் திட்டம் கீழ் வினியோகிக்கப்படும் இந்த குடிநீரில் தரம் மற்றும் சுவை, கடந்த வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பல்வேறு நோய்களுக்கும் பொதுமக்கள் ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, நேற்று முன்தினம் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய, கோவை மாவட்ட தலைமை நீர் பகுப்பாய்வு அதிகாரிகள் சிறுமுகையிலுள்ள நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சுமைதாங்கி பகுதி, அவிநாசி - சேவூர் ரோடு, சூளை, வ.உ.சி., பூங்கா, வாரச்சந்தை பகுதிகளிலும் குடிநீர் மாதிரி ஆய்வுக்காக எடுக்கப்பட்டது.
இதில், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.