/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்! மாணவியருக்கு அறிவுரைஎப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்! மாணவியருக்கு அறிவுரை
எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்! மாணவியருக்கு அறிவுரை
எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்! மாணவியருக்கு அறிவுரை
எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்! மாணவியருக்கு அறிவுரை
ADDED : ஜன 31, 2024 01:08 AM

பல்லடம்:'நல்லவற்றை சந்தேகப்படும் புத்தி மனிதர்களுக்கு இயற்கையாகவே உள்ளது,' என, அரசுப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கருத்து கூறப்பட்டது.
மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு குறித்த மன அழுத்தம் போக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். வாழும் கலை நிர்வாகி ஆறுமுகம், ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.
வாழும் கலை பயிற்சி ஆசிரியர் தினேஷ்குமார் பேசியதாவது:
உண்மையில் தேர்வு குறித்த மனு அழுத்தம் என்பது மாணவ, மாணவியருக்கு கிடையாது. ஆனால், இந்த வார்த்தை சமீப நாட்களாக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் எனில் எதன் மீதாவது ஈர்ப்பு வேண்டும். யார் மீதாவது நமக்கு ஈர்ப்பு ஏற்படும் போது அவர்கள் போல் செயல்பட முயற்சிப்போம்.
நாம் உற்சாகமடைவதுடன் மற்றவர்களும் உற்சாகத்துடன் இருக்க நினைக்க வேண்டும். மாணவர்களுக்கு உடல் சக்தி, நல்ல துாக்கம், ஆரோக்கியமான சுவாசம், சந்தோஷம் ஆகியவை மிக முக்கியமானது. நமக்கு சுவாசத்தை நாமே கட்டுக்குள் கொண்டு வந்தால் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
நாம் விழிப்புடன் இருக்க மூச்சுப் பயிற்சி மிக அவசியம். உடல், மனம், புத்தி, ஞாபக சக்தி ஆகிய வற்றை மாணவர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். நம் புத்தி நல்லதை சந்தேகப்படும். கெட்டதை உடனே ஏற்கும். மூளையில் உள்ள தேவையில்லாத பதிவுகளை நாம் தான் நீக்க வேண்டும். இதற்கு தியானம் செய்வது மிக முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.