ADDED : பிப் 12, 2024 12:49 AM

ஒரு மாதமாக குழாயில் 'காற்று'
சுத்தம் இல்லை
தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்வதே இல்லை. நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை.
- விஜி, தாராபுரம்.
குப்பை தேக்கம்
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் தனலட்சுமி லே-அவுட், விநாயகர் கோவில் அருகே, தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.
- ரவிச்சந்திரன், தனலட்சுமி லே-அவுட்.
திருப்பூர் வீரபாண்டி பிரிவு, குறிஞ்சி நகர் செல்லும் வழியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.
- சேகர், வீரபாண்டி பிரிவு.
தண்ணீர் வீண்
திருப்பூர், பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் ஸ்டாப்பில் இருந்து கணபதிபாளையம் செல்லும் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையில் ஓடுகிறது.
- பாலாஜி, கொடுவாய். (படம் உண்டு)
திருப்பூர், நான்காவது வார்டு, நெருப்பெரிச்சல், வேலக்காட்டு தோட்டம் லைனில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. உடைப்பை சரிசெய்யாததால், வீடுகளுக்கு ஒரு மாதமாக தண்ணீர் வருவதில்லை.
- ராஜூ, நெருப்பெரிச்சல்.
விபத்து அபாயம்
திருப்பூர், 24வது வார்டு, காந்தி நகர், ஏ.பி., நகர் மெயின் ரோட்டில், பகுதி துாரம் நீட்டியபடி சிலாப்பு கல் உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
- சிவசுப்ரமணியம், காந்தி நகர்.
வளைவில் ஆபத்து
திருப்பூர், பார்க் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை எதிரே வளைவில் இடையூறாக டிரான்ஸ்பார்மர் உள்ளது. பாதசாரிகள் பயத்துடன் இவ்விடத்தை கடக்க வேண்டியுள்ளது.
- வின்சென்ட் ராஜ், பார்க்ரோடு.
ரியாக் ஷன்
ஒயர்கள் அகற்றம்
திருப்பூர், 48வது வார்டு, ராக்கியாபாளையம், சினிபார்க் தியேட்டர் ரோடு, பட்டத்தரசியம்மன் கோவில் அருகே மின்கம்பத்தில் இடையூறாக இன்டர்நெட் ஒயர் இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மின்வாரியம் மூலம் ஒயர்கள் அகற்றப்பட்டு விட்டது.
- ராஜேந்திரன், பத்மினி கார்டன்.
கால்வாய் சுத்தம்
திருப்பூர், பி.கே.ஆர்., காலனி மெயின் ரோட்டில் கால்வாயில் மண் தேங்கி, அடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மண் அகற்றப்பட்டு விட்டது.
- தேவராஜ், பி.கே.ஆர்., காலனி.
விளக்கு எரிகிறது
திருப்பூர், 19வது வார்டு, முருகானந்தபுரம் இரண்டாவது வீதியில் தெருவிளக்கு எரியாமல், வீதியே இருள்சூழ்ந்து இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின் சரிசெய்யப்பட்டுள்ளது. விளக்கு எரிகிறது.
- ரஞ்சித், முருகானந்தபுரம்.