ADDED : மே 12, 2025 03:45 AM

திருப்பூர்; அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது.
அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் தலைமை வகித்தார். மொத்தம் 36 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார்.