/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'விழுதுகள்' பயிற்சி பட்டறை ஆசிரியர்களுக்கு 'அட்வைஸ்' 'விழுதுகள்' பயிற்சி பட்டறை ஆசிரியர்களுக்கு 'அட்வைஸ்'
'விழுதுகள்' பயிற்சி பட்டறை ஆசிரியர்களுக்கு 'அட்வைஸ்'
'விழுதுகள்' பயிற்சி பட்டறை ஆசிரியர்களுக்கு 'அட்வைஸ்'
'விழுதுகள்' பயிற்சி பட்டறை ஆசிரியர்களுக்கு 'அட்வைஸ்'
ADDED : செப் 12, 2025 12:32 AM

திருப்பூர்; விழுதுகள் குழந்தைகள் வளமைய ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், திருப்பூரில் 10 இடங்களில், கோவையில் ஐந்து இடத்திலும், குழந்தைகள் மையம் செயல்படுகிறது. இங்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு கல்வி முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் இந்த வள மையங்கள் செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
திருமுருகன்பூண்டியிலுள்ள பாப்பீஸ் வேலி ஓட்டல் வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில், விழுதுகள் திட்ட மேலாளர் சந்திரா வரவேற்றார். விழுதுகள் நிர்வாக மேலாளர் சரண்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உளவியலாளர் ஸ்ரீ லட்சுமி உளவியல் மற்றும் கல்வி சார்ந்த கருத்துக்களை விழுதுகள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். திட்ட மேலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.