/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் 'கவுன்டர்' ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் 'கவுன்டர்'
ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் 'கவுன்டர்'
ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் 'கவுன்டர்'
ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் 'கவுன்டர்'
ADDED : மே 23, 2025 11:56 PM

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்மில் இரண்டு டிக்கெட் கவுன்டர் மட்டும் இருப்பதால், பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறும் நிலை இருந்தது, தற்போது கூடுதல் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது ரயில் பயணிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே நிர்வாகம் தரப்பில் டிக்கெட் வெண்டிங் மெஷின், மொபைல் போன் ஆப் வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தி கொடுத்த போதும், பெரும்பாலான பயணிகள் அதனை பயன்படுத்த யோசித்தனர்; சிலர் டிக்கெட் பெற்றுச் சென்றனர். பலரும் வரிசையில் காத்திருந்து கவுன்டரில் டிக்கெட் வாங்கினர்.
இந்நிலையில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, முதல் பிளாட்பார்மில் ஐந்து கவுன்டர்கள் நிறுவப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பிளாட்பார்ம் மேற்கு பகுதியில் ஒரு கவுன்டர், ஒரு டிக்கெட் வெண்டிங் மெஷின் இருந்தது.
தற்போது, தெற்கு பகுதியில், ஐந்து டிக்கெட் கவுன்டர், ஒரு தகவல் மையம், மூன்று டிக்கெட் 'வெண்டிங்' மெஷின் நிறுவப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இனி நீண்ட நேரம் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல், முன்பதிவில்லா டிக்கெட் பெற்று, பிளாட்பார்ம் சென்று ரயில் பயணத்தை தொடர முடியும். இதனால், ரயில் பயணிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.