Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உள்ளூர் பறவைகளின் ' புகலிடம் ' சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ' புகழிடம் '

உள்ளூர் பறவைகளின் ' புகலிடம் ' சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ' புகழிடம் '

உள்ளூர் பறவைகளின் ' புகலிடம் ' சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ' புகழிடம் '

உள்ளூர் பறவைகளின் ' புகலிடம் ' சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ' புகழிடம் '

ADDED : மே 24, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
உலகளாவிய 'ராம்சர்' அங்கீ காரம் பெற்ற, திருப்பூர் நஞ்ச ராயன் பறவைகள் சரணாலயம், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவையினங்களின் புகலிடமாக, பறவை ஆர்வர்களின் புகழிடமாக இருந்து வருகிறது.

திருப்பூர் வனத்துறை மற்றும் திருப்பூர் இயற்கை கழகத்தினரின் தொடர் கண்காணிப்பில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவையினங்களின் வருகை, பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உள்ளூர் மற்றும் திருப்பூர் மண்ணுக்குரிய பறவைகள் என, 150 வகைக்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. பறவைகளின் இடம் பெயர்வு காலமான நவ., துவங்கி ஜன., வரை, 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் கடல் கடந்து வந்து, இளைப்பாறி செல்லும்.

அவ்வகையில் வெளிநாட்டு பறவைகளின் இடம் பெயர்வு காலம் முடிந்துள்ள நிலையில், தற்போது, குளத்தில் நீர் வரத்து குறைந்திருந்தாலும், சரணாலயத்தில் உள்ள மரம், செடி, கொடிகளில் உள்நாட்டு பறவையினங்கள், அதிகளவில் கூடு கட்டி, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. வனத்துறை மற்றும் திருப்பூர் இயற்கை கழகத்தினர், பறவைகளின் வாழ்வியல் சூழலை ஆவணப்படுத்தியும் வருகின்றனர். 'அதே நேரம், நஞ்சராயன் குளத்தில் சூழ்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி, பறவைகளின் வாழ்விட சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us