/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாவட்டத்தில் வாக்காளராக 100 வயது கடந்த 999 பேர்! ஆய்வு செய்ய அதிரடி உத்தரவுமாவட்டத்தில் வாக்காளராக 100 வயது கடந்த 999 பேர்! ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு
மாவட்டத்தில் வாக்காளராக 100 வயது கடந்த 999 பேர்! ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு
மாவட்டத்தில் வாக்காளராக 100 வயது கடந்த 999 பேர்! ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு
மாவட்டத்தில் வாக்காளராக 100 வயது கடந்த 999 பேர்! ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு

வாக்காளர் பட்டியலில்100 வயது கடந்தவர்கள்
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 100 வயதை கடந்த மொத்தம் 999 வாக்காளர்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதிகபட்சமாக காங்கயத்தில், 274 பேர்; பல்லடத்தில், 171 பேர், 100 வயதை கடந்துள்ளனர். தாராபுரத்தில், 163; திருப்பூர் வடக்கு தொகுதியில், 124; மடத்துக்குளத்தில், 99; உடுமலையில், 87 பேர்; அவிநாசியில், 80; திருப்பூர் தெற்கு தொகுதியில் ஒருவரும், 100வயதை கடந்து, வாக்காளர் பட்டியலில் வாழ்வது தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கூட்டத்தில்எழுப்பப்பட்ட சந்தேகம்
''வாக்காளர் பட்டியலில் நுாறு வயதை கடந்த 999 பேரும், உண்மையில் நுாறு வயதை கடந்துள்ளனரா; அவர்கள் உயிர் வாழ்கின்றனரா'' என்பது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டது. ''இதை பரிசீலிக்கவேண்டும்; வயதில் முரண்பாடுகள் இருப்பின், உரிய ஆவணங்கள் மூலம் திருத்தம் செய்யவேண்டும். வாக்காளர் இறந்திருப்பின் பெயரை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர்கூறும் காரணம்
''வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லாததால், வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் நீக்கத்தில் பின்னடைவு நிலையே நீடிக்கிறது. மாவட்டத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் நுாறு வயதைக் கடந்தவர்கள் இருப்பது அரிதுதான்'' என்கின்றனர் அரசியல் கட்சியினர் சிலர்.