/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கஞ்சா - குட்கா பறிமுதல் 6 பேர் சிறையிலடைப்பு கஞ்சா - குட்கா பறிமுதல் 6 பேர் சிறையிலடைப்பு
கஞ்சா - குட்கா பறிமுதல் 6 பேர் சிறையிலடைப்பு
கஞ்சா - குட்கா பறிமுதல் 6 பேர் சிறையிலடைப்பு
கஞ்சா - குட்கா பறிமுதல் 6 பேர் சிறையிலடைப்பு
ADDED : மே 24, 2025 05:53 AM
திருப்பூர் : திருப்பூர் - மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பகுதியில், சென்ட்ரல் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே பைக்கில் வந்த மூன்று பேரிடம் விசாரித்து, பைக்கை சோதனையிட்டதில், 1.4 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அய்யம்பாளையத்தை சேர்ந்த சாரதி, 23, நாகார்ஜூன், 25; விக்னேஷ், 25 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சுற்றித்திரிந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட, 5.1 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஒடிசாவை சேர்ந்த அஸ்வினி மொஹபத்ரா, 39; பீகாரை சேர்ந்த நிதிஷ்குமார், 25 மற்றும் குளத்துப்பாளையம் சோதனைச்சாவடி அருகே மைதீன், 39 என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


