/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/4 சிறுபாலம் அமைக்கும் பணி; போக்குவரத்து நெருக்கடியால் அவதி4 சிறுபாலம் அமைக்கும் பணி; போக்குவரத்து நெருக்கடியால் அவதி
4 சிறுபாலம் அமைக்கும் பணி; போக்குவரத்து நெருக்கடியால் அவதி
4 சிறுபாலம் அமைக்கும் பணி; போக்குவரத்து நெருக்கடியால் அவதி
4 சிறுபாலம் அமைக்கும் பணி; போக்குவரத்து நெருக்கடியால் அவதி
ADDED : ஜன 06, 2024 11:18 PM

திருப்பூர்:திருப்பூர் - மங்கலம் ரோடு அகலப்படுத்தும் வகையில் பணிகள் திட்டமிட்டு நடக்கிறது.
இதில் ஒரு கட்டமாக இந்த ரோட்டில் நகர எல்லையில் உள்ள நான்கு சிறுபாலங்கள் புதிதாக அமைக்கும் பணி நடக்கிறது. இந்த நான்கு பணிகளும் ஒரே சமயத்தில் நடப்பதால், ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் செல்ல வழி உள்ளது.
இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த மங்கலம் ரோட்டில், நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருந்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடியும், வாகன நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, நொய்யல் கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ரோட்டை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டால், மங்கலம் ரோட்டில் ஏற்படும் நெருக்கடி குறையும்; வாகன ஓட்டிகளும் சிரமமின்றி கடந்த செல்ல முடியும். நொய்யல் கரை ரோடு பணிகள், 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையிலும், இடைப்பட்ட பகுதியில் சிறு அளவு பணி முடிவடையாமல் உள்ளது. இதனை சரி செய்து, வாகனப் போக்குவரத்தை திருப்பி விட வேண்டும்.