/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரிசி கடத்திய 3 பேர் கைது; லாரி, ஆட்டோ பறிமுதல் அரிசி கடத்திய 3 பேர் கைது; லாரி, ஆட்டோ பறிமுதல்
அரிசி கடத்திய 3 பேர் கைது; லாரி, ஆட்டோ பறிமுதல்
அரிசி கடத்திய 3 பேர் கைது; லாரி, ஆட்டோ பறிமுதல்
அரிசி கடத்திய 3 பேர் கைது; லாரி, ஆட்டோ பறிமுதல்
ADDED : ஜூன் 27, 2025 11:59 PM
திருப்பூர்; அவிநாசி அருகே, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், 21 டன் ரேஷன் அரிசியுடன் வாகனங்கள் பிடிபட்டன.
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார், தெக்கலுாரில் உள்ள ஒரு அரிசி ஆலையில், லாரியில் ரேஷன் அரிசி கொண்டு சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., கள் பிரியதர்ஷினி, குப்புராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பறக்கும்படை அலுவலர் கார்த்திக்குமார் மற்றும் போலீசார், அரிசி ஆலைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில், ஒரு லாரியில், 21 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில், கோவை சிந்தாமணிபுதுாரைச் சேர்ந்த பொன்ரமேஷ், 49 மற்றும் தாராபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 42, அவிநாசியை சேர்ந்த பத்மநாபன்,40 ஆகியோர் இதை கொண்டு வந்தது தெரிந்தது.
வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். அரிசி மூட்டைகள் கொண்டு வந்த லாரி மற்றும் ஒரு சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.