/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு
'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு
'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு
'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு
ADDED : பிப் 24, 2024 12:20 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 2வது வார்டு டீச்சர்ஸ் காலனி, நல்லப்பா நகர், பொன்மலர் நகர், காசி விநாயகர் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தில், வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் மதிப்பீடு, 60.32 லட்சம் ரூபாய். இப்பணியை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக அப்பகுதியினர் மத்தியில் நிதி திரட்டப்பட்டது.
அவ்வகையில், சேகரமான நிதி 19.90 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் மாலதி தலைமையில் அப்பகுதி பிரமுகர்கள் இதனை அவரிடம் வழங்கினர்.