/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு
குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு
குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு
குழந்தை தொழிலாளருக்கு பணியா? கடை, ஆலைகளில் அதிரடி ஆய்வு
ADDED : ஜூன் 08, 2024 12:45 AM
திருப்பூர்:குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென, தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தொழிலாளர்துறை உத்தரவுப்படி, ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், திருப்பூர் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ஜெயக்குமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில், ஆய்வு நடந்து வருகிறது.
உதவி ஆய்வாளர்கள், துணை இயக்குனர்கள், போலீஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 'சைல்டு லைன்' பிரதிநிதிகள் அடங்கிய, மாவட்ட தடுப்பு படை, நேற்று ஆய்வு நடத்தியது. கடைகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், கட்டுமான பணி நடக்கும் இடங்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. கூட்டாய்வில், ஒரு குழந்தை தொழிலாளர் இருந்தது கண்டறியப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டப்படி, எவ்வித தொழில்களிலும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, பணியாளராக நியமிக்க கூடாது. அபாயகரமான தொழில்களில், வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது குற்றம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.