/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில்வே யார்டில் பணி 5 ரயில் கோவை செல்லாது ரயில்வே யார்டில் பணி 5 ரயில் கோவை செல்லாது
ரயில்வே யார்டில் பணி 5 ரயில் கோவை செல்லாது
ரயில்வே யார்டில் பணி 5 ரயில் கோவை செல்லாது
ரயில்வே யார்டில் பணி 5 ரயில் கோவை செல்லாது
ADDED : ஜூன் 11, 2024 12:36 AM
திருப்பூர்:'வரும், 13ம் தேதி கோவை ரயில்வே யார்டில் பணி நடப்பதால், இன்டர்சிட்டி, சென்னை எழும்பூர் உட்பட, ஐந்து ரயில்கள் திருப்பூரை கடந்து கோவை செல்லாது; கூடுதலாக போத்தனுார் ஸ்டேஷனில் நின்று செல்லும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்
ஷாலிமர் - திருவனந்தபுரம் (எண்:22642), ஸ்ரீ வைஷ்ண தேவி கோவில் (கட்ரா) - கன்னியாகுமரி ஹீம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318), புதுடில்லி - திருவனந்தபுரம் கேரளா எகஸ்பிரஸ் (எண்:12626), பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12677) மேற்கண்ட நான்கு ரயில் இருகூர் வழியாக பயணித்து, போத்தனுாரில் நிற்கும். வழக்கமாக வழித்தடமான கோவை ஜங்ஷன் செல்லாது.
சென்னை எழும்பூர் - மங்களூரு ரயில் (எண்:16159) பீளமேடு, கோவை வடக்கு, கோவை செல்லாது; போத்தனுாரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.