ADDED : ஜூன் 27, 2024 11:00 PM
பொங்கலுார் ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு கலெக்டருக்கு அளித்த மனு:
தொங்குட்டிபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில், 974 ரேஷன் கார்டுகள் உள்ளன. அருகில் உள்ள டி.ஆண்டிபாளையம், கடகந்திருடி பாளையம், மண்டபம் பகுதி மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் மட்டும் 400 ரேஷன் கார்டுகள் உள்ளன.
கடந்த ஒரு ஆண்டாக டி.ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் வரவில்லை என்று காரணம் கூறி கடை திறப்பதை தாமதப்படுத்தி வருகின்றனர். பகுதி நேர ரேஷன் கடையை உடனடியாக திறக்க வேண்டும்.