ADDED : ஜூன் 27, 2024 11:00 PM
பொங்கலுார் ஒன்றியம், பெருந்தொழுவில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி சமூக நலத்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் டெங்கு காய்ச்சல், நீரிழிவு, ரத்த அழுத்தம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெருந்தொழுவு ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.