/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீண்டும் ஊசி மருந்து குவியல் கரைசேருமா... கரைப்புதுார்? மீண்டும் ஊசி மருந்து குவியல் கரைசேருமா... கரைப்புதுார்?
மீண்டும் ஊசி மருந்து குவியல் கரைசேருமா... கரைப்புதுார்?
மீண்டும் ஊசி மருந்து குவியல் கரைசேருமா... கரைப்புதுார்?
மீண்டும் ஊசி மருந்து குவியல் கரைசேருமா... கரைப்புதுார்?
ADDED : ஜூலை 27, 2024 11:55 PM

பல்லடம்;பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி, லட்சுமி நகர் பகுதியில், போதைக்காக பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் மாத்திரை மருந்துகள் உள்ளிட்டவற்றின் குவியல் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை கிடந்தது, இப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது,
'தினமலர்' நாளிதழ் செய்தி மூலம் இது குறித்து அறிந்த கரைப்புதுார் ஊராட்சி எம்.ஏ., நகர் பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியிலும் ஊசி, மருந்து மாத்திரைகள் கிடப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
எம்.ஏ., நகர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
எம்.ஏ., நகரில் உள்ள தனியார் நிலத்தில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் தினசரி மாலை நேரங்களில், ஏராளமான இளைஞர்கள் கூடுவது வழக்கம். இதனால், இவ்வழியாக பெண்கள் சிறுவர்கள் செல்வதையே தவிர்த்து வருகின்றனர். இளைஞர்கள், மது அருந்துவதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இவர்கள் பயன்படுத்திய இடத்தில், ஊசிகள், மாத்திரைகள் மற்றும் குறிப்பிட்ட சில மருந்து பாட்டில்கள் பரவலாக கிடைக்கின்றன. எனவே, போதைக்காகவே இவற்றை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--------------------
கரைப்புதுார் எம்.ஏ., நகர் பகுதியில் கிடக்கும் ஊசி மருந்து மற்றும் மாத்திரைகள்.