/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வண்டல் மண்ணே இல்லை எப்படி கொடுத்தனர் அனுமதி? அனுப்பட்டி மக்கள் கேள்வி வண்டல் மண்ணே இல்லை எப்படி கொடுத்தனர் அனுமதி? அனுப்பட்டி மக்கள் கேள்வி
வண்டல் மண்ணே இல்லை எப்படி கொடுத்தனர் அனுமதி? அனுப்பட்டி மக்கள் கேள்வி
வண்டல் மண்ணே இல்லை எப்படி கொடுத்தனர் அனுமதி? அனுப்பட்டி மக்கள் கேள்வி
வண்டல் மண்ணே இல்லை எப்படி கொடுத்தனர் அனுமதி? அனுப்பட்டி மக்கள் கேள்வி
ADDED : ஜூலை 27, 2024 11:56 PM
பல்லடம்;காமநாயக்கன்பாளையம் போலீசில் அனுப்பட்டி மக்கள் அளித்த புகார் மனு:
தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டைகளில், விவசாயிகள், வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பல்லடம் ஒன்றியத்தில், அனுப்பட்டி குட்டையிலும் வண்டல் மண் அள்ள கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அனுப்பட்டி குட்டையில் வண்டல் மண்ணே கிடையாது. வண்டல் மண் இல்லாத இக்குட்டையில், மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை, சட்டவிரோதமாக கிராவல் மண் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்து, தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தோம். இதன்படி, ஆய்வு மேற்கொண்ட தாசில்தார் உத்தரவின்படி, தற்போது மண் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர், எங்களை தகாத வார்த்தையால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், ஜாதி கலவரத்தை துாண்டும் வகையில்,
அவர்கள் பேசியது கிராம மக்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சட்ட விரோதமாக கிராவல் மண் அள்ளியதுடன், தடுத்து நிறுத்திய எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.