/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எண்ணெய் குழாய்கள் சாலையோரம் மாறுமா? எண்ணெய் குழாய்கள் சாலையோரம் மாறுமா?
எண்ணெய் குழாய்கள் சாலையோரம் மாறுமா?
எண்ணெய் குழாய்கள் சாலையோரம் மாறுமா?
எண்ணெய் குழாய்கள் சாலையோரம் மாறுமா?
ADDED : ஜூன் 24, 2024 02:11 AM
திருப்பூர்;பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தும் இருகூர் முதல் தேவனகுந்தி வரையிலான எண்ணெய் குழாய் திட்டத்தை ரோட்டோரம் அமைக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் காங்கயம், காடையூரில் நேற்று நடந்தது.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி, மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன், இயற்கை வாழ்வுரிமை இயக்க தலைவர் பொடாரன், உகாயானுார் ஊராட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.