/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓடை தடுப்பு சுவரில் இடைவெளி எதற்கு? ஓடை தடுப்பு சுவரில் இடைவெளி எதற்கு?
ஓடை தடுப்பு சுவரில் இடைவெளி எதற்கு?
ஓடை தடுப்பு சுவரில் இடைவெளி எதற்கு?
ஓடை தடுப்பு சுவரில் இடைவெளி எதற்கு?
ADDED : மார் 12, 2025 12:42 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளை சீரமைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், ஓடை கரையில் ரோடு அமைத்து போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பகுதிவாரியாக ஓடைக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி, சீரமைப்பு செய்யப்பட்டது. அதன்பின் ஓடையின் இரு கரைகளும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையிலும், மழை நாட்களில் வரும் நீர் குடியிருப்பு பகுதிகளில் நுழையாத வகையிலும் ஓடைக்கரையில், தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது.
இதில், ஏ.பி.டி., ரோடு பகுதியில் ஓரிடத்தில், வீடுகள் அமைந்துள்ள இடத்தில், சில அடிகள் நீளத்துக்கு சுவர் அமைக்காமல் இடைவெளி விடப்பட்டுள்ளது.
இதன் இரு புறத்திலும் சுவர் கட்டியுள்ள நிலையில், இந்த இடைவெளி விடப்பட்டுள்ள குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,வை சேர்ந்த ஒருவரின் 'அழுத்தம்' காரணமாக இடைவெளி விடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில், 'தடுப்பு சுவர் கட்டும் பணியில் எங்கும் இடைவெளி விடப்படவில்லை. அந்த இடத்தில் தடுப்பு சுவர் கட்டப்படும்,' என்றனர்.