/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாய ஆலைகளின் எதிர்பார்ப்புகள் என்ன? சாய ஆலைகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
சாய ஆலைகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
சாய ஆலைகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
சாய ஆலைகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
ADDED : ஜூன் 08, 2024 11:38 PM
புதிதாக அமையும் மத்திய அரசு, காற்றாலை அல்லது சோலார் மின் கட்டமைப்பை நிறுவ, மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்கி உதவ வேண்டுமென, திருப்பூர் சாய ஆலைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கும் தரத்தை வழங்க, சாய ஆலைகள் வெளிநாட்டு இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளன; அவற்றிற்கு மானியம் வழங்கி உதவிட வேண்டும்.
நடைமுறையில் இருந்தது போன்ற, 'ஏ-டப்' திட்டத்தை, 2022 ஏப்., 1ம் தேதியில் இருந்து, பின் தேதியிட்டு மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
பொருளாதார மந்தநிலை மற்றும் இழப்புகளை சரிக்கட்ட ஏதுவாக, சிறு, குறு நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், திருப்பூரில் நடைமுறையில் இருக்கும் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளாக, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல் படுத்தி வருகிறோம். தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி வரும் திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங் களுக்கு, கார்பன் கிரெடிட் போன்ற, 'வாட்டர் கிரெடிட்' வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
வட்டியில்லா கடன்
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை இயக்க, பொது சுத்தி கரிப்பு நிலையங்களின் உற்பத்தி செலவில், மின் கட்டண செலவு மட்டும், 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. மின் கட்டண சுமையை குறைத்தால், சாய ஆலைகளின் உற்பத்தி செலவு குறைய வாய்ப்புள்ளது.
எனவே, பொது சுத்திகரிப்பு நிலையங்களின் காற்றாலை அல்லது சோலார் மின் திட்டங்களை நிறுவ, மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்கி உதவ வேண்டும். கோவையில் இருந்து செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை, திருப்பூர் வரை நீட்டித்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.