/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுற்றுலா துறையினருடன் 'வனத்துக்குள் திருப்பூர்' கைகோர்ப்பு சுற்றுலா துறையினருடன் 'வனத்துக்குள் திருப்பூர்' கைகோர்ப்பு
சுற்றுலா துறையினருடன் 'வனத்துக்குள் திருப்பூர்' கைகோர்ப்பு
சுற்றுலா துறையினருடன் 'வனத்துக்குள் திருப்பூர்' கைகோர்ப்பு
சுற்றுலா துறையினருடன் 'வனத்துக்குள் திருப்பூர்' கைகோர்ப்பு
ADDED : ஜூன் 08, 2024 11:40 PM

'திருப்பூர் ஆண்டி பாளையம் குளத்தில், விரைவில் படகு சவாரி துவங்கவுள்ளது' என, மாவட்ட சுற்றுலா அலுவலர் தெரிவித்தார். 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பின் உதவியுடன், குளக்கரையில் மரக்கன்று கள் நடப்பட்டன.
திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள ஆண்டி பாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டு அமைப்பதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக் களுக்கான சிறந்த சுற்றுலா தலமாக இப்பகுதியை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பினருடன் இணைந்து, குளக்கரையை சுற்றி மரக்கன்று நடும் பணியை நேற்று துவக்கினர். வேம்பு, இலுப்பை, பூவரசு, மந்தாரை மற்றும் நாவல் உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறுகையில், ''கலெக்டர் அறிவுரைப்படி, ஆண்டி பாளையம் குளத்தில் விரைவில் படகு சவாரி துவங்கப்பட உள்ளது.
1.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. உள்ளூர் மக்களின் சிறந்த சுற்றுலா தலமாக இப் பகுதியை மாற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
நிகழ்வில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிர் வாகிகள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் முரளிதரன் மாவட்ட சுற்றுலா மேம் பாட்டு சங்க தலைவர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.