/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு
ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு
ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு
ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 05, 2024 12:38 AM

திருப்பூர்;திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி சங்கமம் ஏ.வி.பி., கலையரங்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கதிரேசன் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் லதா உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 'வின் யுவர் வீக்னஸ் மோட்டிவேசன் அகாடமி' சி.இ.ஓ., ஜெகன், சிறப்புரை ஆற்றினார்.
அதில், 'மாணவியர் முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்குரிய எளிய கருத்துக்களையும், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும். முயற்சி பயிற்சி தொடர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். மாணவியர் கல்லுாரியின், மூன்றாண்டு காலத்தில் தங்களின் எல்லா தனித்திறமைகளையும் வெளிகாட்ட வேண்டும்,' என்றார்.