/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:39 AM
திருப்பூர்;ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலை, உயர் நிலைப்பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அம்மாபட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்; கண்டியன் கோவில் நடுநிலைப்பள்ளியில் ஒரு இடைநிலை ஆசிரியர். குளத்துப்புதுார் தொடக்கப்பள்ளியில் 3 இடைநிலை ஆசிரியர் என, மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அப்பணியிடங்களுக்கு, மாதம் 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர்; 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் இந்த ஆசிரியர் பணியிடம் தற்காலிகமானது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவோ அல்லது பதவி உயர்வு மூலமாக நிரந்தர பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யும்வரை பணியில் நீடிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்; பள்ளி அருகாமை பகுதியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை ஆசிரி யர், வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வு, தாள் - 1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு, தாள் -2 ல் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய சான்று களுடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், திருப்பூர். என்கிற முகவரிக்கு, வரும் 8ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.