
தயாராகும்பின்னலாடைகள்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இயங்கும் உற்பத்தியாளர்களிடம், ஆர்டர் கொடுத்து, பல்வகை பின்னலாடைகள் தயார் செய்யப் படுகின்றன. அவை, காதர்பேட்டையில் உள்ள கடைகள் வாயிலாக, மொத்த விற்பனை செய்யப்படுகிறது.
குவியும் தொழிலாளர்கள்
அவற்றை, சில்லரை விற்பனை செய்யும் வியாபாரிகள் வாங்கி, விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூர் பகுதியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை, ஆடைகளை வாங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதற்காக, காதர்பேட்டையைச் சுற்றி வருகின்றனர். காதர்பேட்டைக்கு வரும் வெளியூர் மக்களும், தேவையான பின்னலாடைகளை வாங்கிச்செல்கின்றனர்.
மலிவுவிலையில்அள்ளலாம்
'ஸ்மார்ட் சிட்டி' ரோடு அமைத்த பிறகு, பிளார்ட்பாரம் ஓரத்தில் பெல்ட் கட்டில்களை விரித்து, ஆடை விற்பனை நடப்பது அதிகமாகிவிட்டது. காதர்பேட்டை என்பது, மொத்த பின்னலாடை விற்பனைக்கு பெயர்போன இடம் என்ற நிலைமாறிவிட்டது.