தக்காளி குவிகிறது விலையோ சரிகிறது
தக்காளி குவிகிறது விலையோ சரிகிறது
தக்காளி குவிகிறது விலையோ சரிகிறது
ADDED : ஜூலை 28, 2024 11:58 PM
திருப்பூர்:திருப்பூரில் உள்ளூர் தக்காளியுடன், வெளிமாநில தக்காளியும் லாரிகளில் வந்து குவிகிறது. தென்னம்பாளையம், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கு மொத்தமாக, 220 டன் தக்காளி வருவதால், மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாயாக குறைந்துள்ளது.
மளிகை, காய்கறி கடைகளில் கிலோ, 35 முதல், 40 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. சாலையோரங்களில் மூன்றரை கிலோ, 100 ரூபாய்க்கு கூவிகூவி விற்கப்படுகிறது. விலை சரிவு, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் மட்டுமே நடப்பதால், காய்கறி விற்பனை மந்தமாக உள்ளது. தக்காளி வழக்கத்தை விட குறைவாக விற்கும் நிலையில், வரத்து வந்து கொண்டே இருப்பதால், விலை குறைந்து கொண்டே இருக்கிறது. மொத்த விலையில், 14 கிலோ சிறிய கூடை, 400 ரூபாய், 26 கிலோ பெரிய கூடை, 750 ரூபாய்க்கு விற்கிறோம். இன்னும் விலை சரியலாம்,' என்றனர்.