/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வலுவிழக்கும் ஆற்றுப்பாலம்; புதுப்பிக்க எதிர்பார்ப்பு வலுவிழக்கும் ஆற்றுப்பாலம்; புதுப்பிக்க எதிர்பார்ப்பு
வலுவிழக்கும் ஆற்றுப்பாலம்; புதுப்பிக்க எதிர்பார்ப்பு
வலுவிழக்கும் ஆற்றுப்பாலம்; புதுப்பிக்க எதிர்பார்ப்பு
வலுவிழக்கும் ஆற்றுப்பாலம்; புதுப்பிக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 13, 2025 11:30 PM
உடுமலை ; உடுமலை அருகே, நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் ஆற்றுப்பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை ஒன்றியம் தேவனுார்புதுாரில் இருந்து, மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேலும், ஆண்டியூர் கிராமம் மற்றும் மயிலாடும்பாறை மலைவாழ் கிராம மக்கள் குடியிருப்பும் அப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், தேவனுார்புதுாரில், இருந்து தெற்குப்பகுதிக்கு செல்லும் வழியில், பாலாறு, நல்லாறு மற்றும் மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன. இந்த நீராதாரங்களை கடக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, நல்லாற்றின் குறுக்கே மேம்பாலம், நீண்ட காலத்துக்கு முன் கட்டப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக அவ்வழித்தடத்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நீண்ட கால பயன்பாடு காரணமாக, பாலம் வலுவிழந்து வருகிறது; தடுப்பு சுவர்கள் உள்ளிட்ட பகுதிகளில், விரிசல் ஏற்பட்டு பரவி வருகிறது.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இப்பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.