/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாறைக்குழிகளில் கழிவு கொட்டப்படும் அவலம் பாறைக்குழிகளில் கழிவு கொட்டப்படும் அவலம்
பாறைக்குழிகளில் கழிவு கொட்டப்படும் அவலம்
பாறைக்குழிகளில் கழிவு கொட்டப்படும் அவலம்
பாறைக்குழிகளில் கழிவு கொட்டப்படும் அவலம்
ADDED : ஜூன் 12, 2024 10:33 PM

பல்லடம் : பல்லடம் வட்டாரத்தில் உள்ள பயன்பாட்டற்ற பாறைக்குழிகளில், தொழிற்சாலை மற்றும் கட்டடக்கழிவுகள் கொட்டி நிரப்பும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் தாலுகா, வேலம்பாளையம், கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 35க்கும் அதிகமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பல கல்குவாரிகள், உரிமம் புதுப்பிக்கப்படாமல் பயன்பாடின்றி கைவிடப்பட்டன. இவ்வாறு பயன்பாடு இன்றி கைவிடப்பட்ட பல கல்குவாரிகள் பல்லடம் வட்டாரம் முழுவதும் ஏராளமாக உள்ளன. இதுபோல், பயன்பாடின்றி உள்ள பாறைக்குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கமான ஒன்று.
ஆனால், சமீபகாலமாக, இது போன்று கைவிடப்பட்ட பாறைக்குழிகள், குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளன. ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டும் கிடங்காக பயன்பட்டு வரும் பாறைக்குழிகளில், பிளாஸ்டிக் குப்பைகள், கட்டட மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது.
பாறைக்குழிகளில் சேகரமாகும் மழை நீர், விவசாயம் அல்லது ஊராட்சிகளின் பயன்பாட்டுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால், பாறைக்குழிகள் அனைத்தும் குப்பை கிடங்குகளாக மாறி வருவதால், மழை நீரை சேகரித்து வைப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு, கைவிடப்பட்ட பாறைக்குழிகள் குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால், குப்பை கிடங்குகளாகவே மாறி வருகின்றன.