/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வக்பு வாரிய கடிதம் குழப்பம் பொதுமக்கள் சாலை மறியல் வக்பு வாரிய கடிதம் குழப்பம் பொதுமக்கள் சாலை மறியல்
வக்பு வாரிய கடிதம் குழப்பம் பொதுமக்கள் சாலை மறியல்
வக்பு வாரிய கடிதம் குழப்பம் பொதுமக்கள் சாலை மறியல்
வக்பு வாரிய கடிதம் குழப்பம் பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 20, 2024 05:00 AM

பல்லடம், : பல்லடம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில், வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் என குறிப்பிட்டு பல்லடம் பத்திரப்பதிவுத் துறைக்கு வக்பு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வக்பு வாரியம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய பல்லடம் போலீசார், வக்பு வாரிய அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.