/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழந்தை தொழிலாளர் முறை அகற்ற சபதம் குழந்தை தொழிலாளர் முறை அகற்ற சபதம்
குழந்தை தொழிலாளர் முறை அகற்ற சபதம்
குழந்தை தொழிலாளர் முறை அகற்ற சபதம்
குழந்தை தொழிலாளர் முறை அகற்ற சபதம்
ADDED : ஜூன் 13, 2024 07:32 AM

திருப்பூர்: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. 'குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்' எனும் தலைப்பில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செயலர் கிருஷ்ணமூர்த்தி, தீபாஸ்ரீ தலைமையில்,'குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்தால் புகார் தெரிவிக்க வேண்டும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரியில், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். மாணவியர் கூடி, குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற சபதமேற்றனர்.