/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திட்டமின்றி வடிகால்; தீர்வு இன்றி சிக்கல் திட்டமின்றி வடிகால்; தீர்வு இன்றி சிக்கல்
திட்டமின்றி வடிகால்; தீர்வு இன்றி சிக்கல்
திட்டமின்றி வடிகால்; தீர்வு இன்றி சிக்கல்
திட்டமின்றி வடிகால்; தீர்வு இன்றி சிக்கல்
ADDED : ஜூன் 13, 2024 07:32 AM

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி, சி.எம்., நகரில், நீண்ட காலமாக மழைநீர் வடிகால் வசதி கிடையாது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் தேங்குவதால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் உற்பத்தியாயின.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சில மாதங்கள் முன், பல லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால், உரிய 'டிஸ்போசல் பாய்ன்ட' இல்லாததால், நகராட்சி மழைநீர் வடிகாலுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.
நகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் ஏற்கனவே நிரம்பி வழிந்து ரோட்டில் சென்று வருவதால், நகராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை ஏற்க மறுத்தது. மழைநீர் வடிகால் கட்டப்பட்டும், பயன்படுத்த முடியாத நிலையில், மீண்டும் கழிவுநீர் அனைத்தும் ரோட்டுக்கே வந்தன.
இப்பிரச்னைக்கு பொதுமக்களின் போராட்டங்களுக்கு பின்னும் தீர்வு கிடைக்கவில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் பயனற்றுக் கிடக்கிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'அதிகாரிகளை நம்பி பயனில்லை என்பதால், வீடுதோறும் நாங்களே உறிஞ்சுகுழி அமைத்து வருகிறோம்,' என்றனர்.