/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேலை உறுதி திட்டத்தில் பணி கிராம மக்கள் திரண்டு முறையீடு வேலை உறுதி திட்டத்தில் பணி கிராம மக்கள் திரண்டு முறையீடு
வேலை உறுதி திட்டத்தில் பணி கிராம மக்கள் திரண்டு முறையீடு
வேலை உறுதி திட்டத்தில் பணி கிராம மக்கள் திரண்டு முறையீடு
வேலை உறுதி திட்டத்தில் பணி கிராம மக்கள் திரண்டு முறையீடு
ADDED : ஜூலை 16, 2024 02:28 AM

திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், குண்டடம் பகுதி மக்கள் அளித்த மனு:
குண்டடம் ஒன்றியம், பெல்லம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் எங்களுக்கு விவசாய தொழிலே வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக உள்ளது. தேசிய வேலை உறுதி திட்டத்தில், 700 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாய நிலம் குறைவாக உள்ளதால், அனைவருக்கும் வேளாண் பணி தர மறுக்கின்றனர்.
இதனால், பெரும்பாலான குடும்பங்கள், வேலை வாய்ப்பின்றி, பரிதவிக்கின்றன. வேலை உறுதி திட்டத்தில், எங்கள் கிராம மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்த்து, வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை, பத்து குடம் தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. ேசீரான இடைவெளியில், போதுமான குடிநீர் வினியோகிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---
வேலை உறுதி திட்டத்தில், பணி வழங்க கேட்டு, கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட குண்டடம் ஒன்றியம், பெல்லம்பட்டி கிராம மக்கள்.